மீண்டும் திறக்கப்படும் களனி பல்கலைக்கழகம்

களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது.

மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடம் டிசம்பர் 18 ஆம் திகதி திறக்கப்பட உள்ளது.