பால் புரைக்கேறியதால் உயிரிழந்த குழந்தை!

யாழ். மிருசுவில் பகுதியில் பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மிருசுவில் – வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை பிறந்தது தொடக்கம் வைத்தியசாலையிலேயே இருந்து வந்துள்ளது.

மரண விசாரணை
இந்நிலையில், பால் புரையேறி குழந்தை உயிரிழந்துள்ளது. பால் சுவாசக் குழாயினுள் சென்றதால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நேற்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.