திரிஷாவிடம் மன்னிப்பு கோரிய மன்சூர் அலிகான்

திரிஷா – மன்சூர் அலிகான்
நடிகை திரிஷாவை பற்றி மோசமாக பேசியதால் நடிகர் மன்சூர் அலிகான் பெரும் சர்ச்சையில் சிக்கினார். நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இந்திய மகளீர் ஆணையம், நடிகர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவேண்டும் என கண்டனம் தெரிவித்தனர்.

மன்னிப்பு
ஆனால், நான் செய்தது தவறு இல்லை, மன்னிப்பு கேட்க மாட்டேன் என மன்சூர் அலிகான் கூறினார். இந்நிலையில், இன்று நடிகை திரிஷா குறித்து பேசியதற்காக நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.” என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்துள்ளது.