குளிர்காலத்தில் முகத்தில் தேன் தடவலாமா?

பொதுவாக பெண்கள் தங்களின் அழகை மெருகூட்டி கொள்வதற்காக முகத்தில் தேன் தடவுவார்கள்.

இதனை கோடைக்காலங்களை தாண்டி குளிர்க்காலத்திலும் செய்வார்கள்.

அழகான சருமத்தைப் பெற நினைக்கும் பெண்கள் ரசாயனம் கலந்த பொருட்களைத் தவிர்த்து, வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிப்பது சிறந்த விடயமாக பார்க்கப்படுகின்றது.

காலங்கள் மாற மாற சருமத்திலும் சில மாற்றங்கள் ஏற்படும். இதனை கவனித்த பிறகு தான் சரும பராமரிப்புகளில் ஈடுபட வேண்டும்.

அந்த வகையில் குளிர் காலங்களில் முகத்தில் தேன் தடவலாமா? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

தேன் தடவினால் என்ன நடக்கும்?
1. குளிர்காலத்தில் சரும வறட்சி அடிக்கடி அதிகரிக்கும். இதற்காக, சருமத்திற்கு பல வழிகளில் நீரேற்றத்தை வழங்க முயற்சி செய்ய வேண்டும்.

2. இயற்கையாகவே சருமத்திலுள்ள சூட்டை வெளியேற்றுவதற்கு தேன் தடவலாம்.

3. முகத்தில் இருக்கும் துளைகளை சுத்தம் செய்ய தேன் உதவுகிறது.

4. முக தோலை மென்மையாகவும் பொலிவாகவும் தேன் வைத்து கொள்கின்றது.

5. பச்சை பால் சருமத்தை ஈரப்பதமாக்க உதவியாக இருக்கின்றது. இதனால் தேனை பாலூடன் கலந்து முகத்தில் தடவும் பொழுது பலன் இரட்டிப்பாக கிடைக்கின்றது.

தேனை கொண்டு முகத்தை பராமரிக்கும் முறை

1. முதலில், ஒரு பவுலில் சுமார் 3 முதல் 4 ஸ்பூன் தேன் போடவும்.

2. அதில் 2 முதல் 3 ஸ்பூன் பச்சை பால் சேர்க்கவும்.

3. இவை இரண்டையும் நன்றாக கலக்கவும்.

4. இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் பிரஷ் மூலம் தடவவும்.

5. இந்த பேக்கை முகத்தில் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

முக்கிய குறிப்பு

வாரத்திற்கு இரண்டு தடவை செய்தால் போதுமானதாக இருக்கும்.