கனடாவிற்கு சீனா விடுத்துள்ள அறிவிப்பு!

ராஜதந்திர ரீதியிலான முரண்பாடுகளுக்காக கனடாவை வர்த்தக ரீதியில் தண்டிக்கப் போவதில்லை என சீனா அறிவித்துள்ளது.

கனடாவின் உள்விவகாரங்களில் சீனா தேவையின்றி தலையிடுவதாக கடந்த சில காலங்களாக குற்றம் சுமத்பத்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கனடாவின் பொதுத் தேர்தல்களில் சீனா தலையீடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கனடாவிற்கான சீனத்தூதுவர் கொங் பியூவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது.

முரண்பாட்டு நிலையினால் கனடிய இறைச்சி வகைகள் மற்றும் கனோலா எண்ணெய் இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது.

கனடாவிற்கு எதிரான ஓர் ஆயுதமாக பொருளாதார விவகாரங்களை பயன்படுத்த போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.