லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா

லியோ திரைப்படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திற்கு விஜய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் லியோ.

மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில விஷயங்களை சேர்த்திருந்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தன் ஸ்டைலிலேயே உருவாக்கியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை தனது ஸ்டைலில் இயக்கி மிகப்பெரிய வெற்றிக் கண்ட லோகேஷ் இந்த லியோ படத்தையும் தனது ஸ்டைலிலேயே இயக்கியுள்ளேன் என கூற ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளார்கள்.

லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ், ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

சம்பள விவரம்
விஜய்யின் லியோ படத்திற்காக கடந்த ஒரு வருடமாக உழைத்திருக்கும் லோகேஷ் இப்படத்திற்காக ரூ 30 முதல் ரூ. 35 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

மாநகரம் படத்தில் துவங்கி தொடர்ந்து லோகேஷ் ஹிட் கொடுத்து வருவதால் படத்திற்கு படம் அவரின் சம்பளமும் கூடி வருகின்றது.