சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவிற்கு செக் வைத்த முத்து!

சிறகடிக்க ஆசை சீரியல் தான் இப்போது விஜய் டிவியில் நம்பர் 1 தொடராக இருக்கிறது. பாக்கியலட்சுமி உள்ளிட்ட மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.

தற்போது மாமியார் விஜயா தனது இரண்டாவது மருமகள் ரோகிணி பணக்கார வீட்டு பெண் என நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது உண்மை முகம் தெரியவந்தால் தான் மாமியார் நிலைமை என்ன ஆகுமோ.

அடுத்த வார ப்ரோமோ
அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. மூன்றாவது மகன் ரவிக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு பெண் வீட்டாரை வர சொல்லி இருக்கிறார் விஜயா.

அவர்கள் வரும் நேரத்தில் மீனா அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும், மேலும் முத்து வீட்டில் இருக்க கூடாது எனவும் கூறுகிறார்.

அதை கேட்டு டென்ஷன் ஆகும் முத்து ‘நான் இங்கே தான் இருப்பேன்’ என கூறுகிறார். மேலும் வர போகும் பெண் யார் என்பது அடுத்த வாரம் தான் தெரிய வரும். ப்ரோமோ இதோ..