அதிரடி முடிவு எடுத்துள்ள விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி
இயக்குனர் எஸ்ஏசியின் சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பின் கடந்த 2012ம் ஆண்டு நான் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

பிச்சைக்காரன் என்ற படம் அவருக்கு நடிகருக்கான பெரிய அந்தஸ்தை கொடுத்தது என்றே கூறலாம். நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் காட்டி வருகிறார்.

அடுத்த பிளான்
வரும் அக்டோபர் 6ம் தேதி விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, சமீபத்தில் நடந்த எனது இசைக் கச்சேரி மூலம் ஒரு விஷயத்தை புரிந்துகொண்டேன்.

இசைக் கச்சேரி மூலம் இசையமைப்பாளராக தற்போதும் தன்னை ரசிகர்கள் அதிகமாக விரும்புவதை எடுத்துக் காட்டியுள்ளதாகவும் அதனால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு பிஜிஎம் இல்லாமல் பின்னணி பாடல்களை மட்டும் எடுத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வருங்காலத்தில் நடிப்பு மற்றும் இசையமைப்பது என இரண்டிலும் கவனம் செலுத்த முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.