ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து வயதானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகவில்லை என்று கூறுவார்.
அந்த வசனம் இவருக்கும் பொருந்தும், 53 வயதாகும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இப்போது யங் ஆக காணப்படுகிறார்.
கடைசியாக ரம்யா கிருஷ்ணன், ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அப்படத்தை தொடர்ந்து வேறு படங்களில் நடிப்பார் அறிவிப்பு வரும் என்று பார்த்தால் இப்போது சின்னத்திரையில் இவர் நடிக்க வந்துள்ளது குறித்து செய்தி வந்துள்ளது.
புதிய தொடர்
நடிகை ரம்யா கிருஷ்ணன் கலசம், தங்கம், ராஜகுமாரி, வம்சம் என நிறைய தொடர்கள் நடித்துள்ளார். கடைசியாக தெலுங்கில் Naga Bhairavi என்ற தொடரில் நடித்துள்ளார்.
தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் நள தமயந்தி என்ற தொடரில் நடிக்க வந்துள்ளார். சீரியலில் அவர் நடிக்கும் காட்சிகள் புகைப்படமாக வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
View this post on Instagram