ஷபானா பிறந்தநாள் கொண்டாட்டம்

சீரியல் நடிகை
ஜீ தமிழில் படு ஹிட்டாக ஓடிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி. இந்த தொடரில் நாயகியாக ஷபானா என்பவர் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார்.

அதில் இருந்து ஷபானாவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியது என்றே கூறலாம். அந்த தொடரில் கடைசி வரை நடித்து முடித்த  ஷபானா இப்போது சன் தொலைக்காட்சியில் மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

தொடர் ஓரளவிற்கு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகை ஷபானா சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவ்வப்போது ஜோடியாக புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்த ஷபானா இப்போது தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவரது கணவர் ஆர்யனுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷபானாவிற்கு ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.