தனுஷ் குடும்பத்திலிருந்து புது ஹீரோ!..அதும் யார் இயக்கத்தில் தெரியுமா?

தனுஷ்
கோலிவுட் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். தனது 50 படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலானது. இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்படுகிறது.

புது ஹீரோ
இந்நிலையில் மதுரை அன்பு தயாரிக்கும் ஒரு படத்தில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இப்படத்தை தனுஷ் தான் இயக்குவதாகவும் சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அரவிப்பு வரவில்லை.