தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா நடிகை ஸ்வாதி

நடிகை ஸ்வாதி
சசிகுமார் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்தப் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்வாதி.

அப்படத்தை தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உட்பட சில படங்களில் நடித்தார். இவர் விகாஸ் வாசு என்ற விமானியைக் காதலித்து வந்தார்.

பின் 2018ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

விவாகரத்தா
இன்ஸ்டாவில் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்ட ஸ்வாதி தற்போது அந்த போட்டோக்களை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதேபோல் இரண்டு வருடத்துக்கு முன்பே வதந்தி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.