விஜயின் பட வாய்ப்பை தவற விட்ட ரம்பா

ரம்பா
90-களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் 1996 -ம் ஆண்டு வெளியான “உள்ளத்தை அள்ளித்தா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து கமல்,ரஜினி, பிரஷாந்த், விஜய் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரம்பா 2010 -ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் 1999 -ம் ஆண்டு வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஹீரோயினாக சிம்ரன் நடித்து ரசிகர்ளை கவர்ந்திருப்பார்.

இப்படத்தில் முதல் முதலாக ஹீரோயினாக நடிக்கவிருந்த ரம்பா தானாம். சில காரணங்களால் ரம்பாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.