இந்த சிறுவயது நட்சத்திரம் யார் தெரியுமா?

வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர்.

அட இவரா
அஜித், விஜய், கமல் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வேறு யாருமில்லை நடிகை தேவயானி தான். ஆம், நடிகை தேவயானியின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.