சினிமாவில் இருந்து விலகுகிறாரா? நடிகை சமந்தா

நடிகை சமந்தா கடந்த வருடம் தான் மயோசிடிஸ் என்ற auto immune நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று ஓரளவு குணமாகி இருக்கிறார்.

தற்போது விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். மேலும் Citadel தொடரின் ஷூட்டிங்கும் விரைவில் முடிய இருக்கிறது.

சமந்தா எடுத்த முடிவு
இந்நிலையில் தற்போது கையில் இருக்கும் ப்ராஜெக்ட்களை முடித்தபிறகு சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க இருக்கிறாராம். மேலும் ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் சில தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டாராம்.

ஒரு வருடம் பிரேக் எடுத்து தனது உடல்நிலையை மட்டும் கவனிக்க போகிறாராம் சமந்தா.