வெறித்தனாமாக ஒர்க்கவுட் செய்யும் நடிகை காஜல் அகர்வால்..

காஜல் அகர்வால்
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். திருமணம் ஆகி குழந்தைக்கு தாய் ஆன பின்பும் தனது மார்க்கெட்டை இழக்காமல் இருக்கிறார்.

அடுத்ததாக காஜல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

நாளுக்கு நாள் இப்படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளிவர எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்தியன் 2 மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் சொந்தமாக பிசினஸ் கூட துவங்கிவிட்டார்.

ஒர்க்கவுட் வீடியோ
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை பெற்ற பின் சற்று உடல் எடை கூடி இருந்த காஜல் தற்போது ஜிம் ஒர்க்கவுட் மூலம் ஸ்லிம்மாக மாறிவிட்டார். இதோ அந்த வீடியோ..