ஹாலிவுட் ஹீரோவிற்கு வில்லனாகும் ஷாருக்கான்..

ஷாருக்கான்
இந்தியாவின் பாலிவுட் கிங் கான் என்று அழைக்கப்படுபவர் “ஷாருக்கான்”. இவர் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பிரபலமானவர்.

இவர் திரையுலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் “ஜவான்” படத்தில் நடித்து வருகிறார்

இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.

வில்லனாகும் ஷாருக்கான்
இந்நிலையில் ஹாலிவுட் திரைப்படம் “ஃபாஸ்ட் & ஃபியூரியஸ்” படத்தின் 11ம் பாகத்தில் வின் டீசலுக்கு வில்லனாக நடிக்க ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் வெளிவந்து 10 பாகங்களை கொண்ட படம் “ஃபாஸ்ட் & ஃபியூரியஸ்”. இப்படத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கான தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இப்படத்தின் 10ம் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அடுத்த பாகத்தை பற்றி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இணைவாரா என்பதை பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது. அதை பொறுத்திருந்து பார்ப்போம்.