முதன் முறையாக தனது மகனுடன் சுற்றுலா சென்ற நடிகர் பிரபுதேவா

பிரபு தேவா
தமிழ் திரை உலகில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களில் கலக்கியவர் பிரபு தேவா.

தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என படங்கள் நடிப்பது, பாடல்களுக்கு நடனம் அமைப்பது என பிஸியாக இருக்கிறார்.

குடும்பம்
நடிகர் பிரபு தேவா கடந்த 1995ம் ஆண்டு ரமலத் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார்கள்.

இதுவரை தனது மகன்களின் புகைப்படங்களை வெளியிடாத பிரபு தேவா தற்போது முதன்முறையாக தனது இன்ஸ்டாவில் மகனுடன் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இருவரையும் பார்க்க அப்பா-மகன் போல் தெரியவில்லை, பிரபு தேவா அவ்வளவு பிட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Prrabhudeva (@prabhudevaofficial)