நடிகை சன்னி லியோனுக்கு கொலை மிரட்டல் விடுப்பு!

சன்னி லியோன்
உலக அளவில் மிக பிரபலமான நபர்களில் ஒருவர் தான் நடிகை சன்னி லியோன். தற்போது இவர் பாலிவுட் படங்களை தாண்டி தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவான கென்னடி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக சன்னி லியோன் கேன்ஸ்க்கு சென்று இருந்தார்.

கொலை மிரட்டல்கள்
சன்னி லியோன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நீல படங்களில் நடித்துவந்தார். அந்த சமயத்தில் நடந்த பிரச்னைகளை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், நான் இந்தியாவிற்கு வரவிரும்பவில்லை. என்னை எல்லாரும் வெறுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் என் கணவர் என்னை அழைத்து சென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சொன்னார்.

அதன் பிறகு எனக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தது. அப்போது சிலர் என்னை படத்தில் நடிக்க கூடாது என்று கொலை மிரட்டல் எல்லாம் வந்தது என்று கூறியுள்ளார்.