பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 2

பேரீச்சம் பழம் – 10

பாதாம் – 20

பிஸ்தா – சிறிதளவு

முழு கொழுப்புள்ள பால் – 1/2 லிட்டர்

சர்க்கரை – 2 தேக்கரண்டி

வெண்ணிலா எசென்ஸ் – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்) ஐஸ் கட்டிகள்

குங்குமப்பூ – அலங்கரிக்க

செய்முறை

* வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * பேரீச்சம் பழத்தை விதை நீக்கி எடுத்துக்கொள்ளவும்.

* பாதாமை ஊறவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும். * பிஸ்தா, 8 பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், பேரீச்சம் பழம், பாதாம் – 12, சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

* கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும்.

* பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக் தயார்.