திடீரென நிறுத்தப்பட்ட சிவகர்த்திகயனின் எஸ்.கே.21 படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் “பிரின்ஸ்” படத்தின் தோல்விக்கு பிறகு, நடிக்கும் “மாவீரன்” படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.

இதன்பின் “அயலான்” படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து, ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கிறார்.

எஸ்.கே.21
கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவியும் நடிக்கிறார். இப்படத்திற்கு பெயரிடப்படாத சூழ்நிலையில் “எஸ்.கே.21” என பெயரிடப்பட்டது.

“எஸ்.கே.21” படத்தின் படப்பிடிப்பு மே 5ம் தேதி தொடங்கியது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படம் ராணுவ அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி இருப்பதால் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்கியது.

நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு

55 நாட்களுக்கு திட்டமிட்டியிருந்த நிலையில் 10 நாட்களில் படக்குழுவினர் சென்னை திரும்பிவிட்டனர். ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதால் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

 

இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் படப்பிடிப்பிற்கு தடைவிதித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.