இந்த ராதிகா நல்லவங்களா கெட்டவங்களா?

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா மற்றும் கோபி இருக்கும் பாக்யா இருக்கும் வீட்டுக்குள் வந்து இருப்பது தொடர்ந்து பல சிக்கல்களை உருவாக்கி வருகிறது.

காபியில் தொடங்கி பல சிக்கல்களை வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அடுத்த எபிசோடுகளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

வழுக்கி விழும் ஜெனி
பாக்யாவின் மூத்த மருமகள் ஜெனி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் திடீரென வழுக்கி விழுந்திருகிறார். அப்போது வீட்டில் இருக்கும் ராதிகா அதை பார்த்துவிட்டு ஜெனியை மருத்துவமனையில் கொண்டு சென்று அட்மிட் செய்துவிட்டு பாக்யாவுக்கு கால் செய்து சொல்கிறார்.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ‘ராதிகா நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?’ என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.