பிச்சைக்காரன் -2 படத்தின் ‘கோவில் சிலையை’ பாடல் வெளியானது

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வைரலானது.

இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாடலான ‘கோவில் சிலையை’ பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அண்ணன் -தங்கைக்கு இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.