சமந்தாவை அடுத்து விவாகரத்திற்கு தயாராகும் மற்றுமோர் நடிகை!

விவாகரத்து
தெலுங்கு சினிமாவில் நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோர் திடீரென விவகாரத்தை அறிவித்தது அனைவருக்கும் ஷாக் அளித்தது. அதனை தொடர்ந்து தற்போது சிரஞ்சீவியின் தம்பி மகளான நடிகை நிஹாரிகாவும் கணவரை விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நிஹாரிகா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதி உடன் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் அவர் நடித்து இருந்தார்.

கணவர் போட்டோக்கள் நீக்கம்
நிஹாரிகா Chaitanya Jonnalagadda என்ற நபரை டிசம்பர் 2020ல் திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணத்தில் தற்போது பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் unfollow செய்துவிட்ட நிலையில் தற்போது நிஹாரிகா அவரது கணவரின் போட்டோக்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கி இருக்கிறார். அதனால் தற்போது அவர்கள் விவாகரத்து செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.