தமிழகத்தில் விடுதலை படத்தின் மொத்த வசூல் நிலவரம்

விடுதலை
சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்து கடந்த மாதம் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விடுதலை.

வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தில் முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பெரிதாக காட்சிகள் இல்லை. ஆனால், வந்த காட்சிகள் அனைத்திலும் மாஸ் காட்டிவிட்டார்.

ஆனால், இரண்டாம் பாகத்தில் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியின் ஆட்டம் இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இதனாலேயே விடுதலை இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

வசூல் விவரம்
இந்நிலையில், இப்படம் வெளிவந்த 11 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.

மேலும் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.