இலங்கை பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்

இலங்கையில் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி பேருந்துகளில் பயண சீட்டுகள் (tickets) பெற்றுக் கொள்ள பணத்திற்கு பதிலாக அட்டையை செலுத்தி பயண சீட்டைப் பெறும் திட்டமே இவ்வருடம் அறிமுகப்படுத்தவுள்ளது.

பேருந்து பயணச் சீட்டு
இந்த விடயத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

அதற்கேற்ப பயணிகள் QR code முறையைப் பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெறுவதற்காக புதிய தொழிநுட்ப முறைமை அறிமுகப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.