கனடாவில் உணவு விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கனடாவில் உணவு வகைகளுக்கான விலைகள் இந்த ஆண்டிலும் தொடர்ந்து உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இறைச்சி, மரக்கறி வகைகள் மற்றும் பால்பொருள் உற்பத்திகளில் போன்றவற்றின் விலைகள் கூடுதல் அளவில் உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 7 வீதம் வரையில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடனாவின் உணவுப் பொருள் விலை குறித்த அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் நான்கு பேரைக் கோண்ட குடும்பம் ஒன்றின் வருடாந்த உணவுச் செலவு 16288 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொகையான கடந்த வருடத்திலும் ஆயிரம் டொலர் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.