கரித்தூள் மாஸ்க் முகத்தில் செய்யும் மாயாஜாலம்

சரும பராமரிப்பு விஷயத்தில் ஃபேஸ் மாஸ்க் மிக மிக முக்கியமானது. அதிலும் கரித்தூள் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றன. முகப்பிரச்சனைகளைச் சரி செய்ய இதை பயன்படுத்தலாம். முகப்பரு பிரச்சனை தொடங்கி பல சரும பாதிப்புகளை இது சரிசெய்கிறது

. கரித்தூளை முகத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

கரித்தூள்- 1 டீஸ்பூன்

புரோபயாடிக் காப்ஸ்யூல் – 1

ஆப்பிள் சைடர் வினிகர் – 2 டீஸ்பூன்

அத்தியாவசிய எண்ணெய் – 1 சொட்டு

ஒரு கிண்ணத்தில் கரித்தூள், புரோபயாடிக் காப்ஸ்யூல், ஆப்பிள் சைடர் வினிகர், அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.

உலர்ந்ததும், அதை குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை மீண்டும் நிரப்ப மாய்ஸ்சரை தடவவும். இப்படி மாதம் 2 முறை செய்தால் போது உங்கள் முகம் பளிச்சிடும். முகத்தை முதலில் அழுக்குகள் இன்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களது முகத்தில் க்ளேன்சரை போட்டு நன்றாக மசாஜ் செய்து துடைத்து விட வேண்டும்.

க்ளேன்சர் இல்லை என்றால், பாலை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாகும். மாஸ்க் தயாரிக்க முதலில் கரித்துண்டை (1 டீஸ்பூன்) சேர்த்துக் கொள்ள வேண்டும். தேன் அல்லது முல்தானி மட்டியை (1 டீஸ்பூன்)இந்த கரித்துண்டுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு க்ரீம் போன்ற பதத்திற்கு வர வேண்டும். இந்த மாஸ்க்கை உங்களது முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள்.

முழுமையாக 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த மாஸ்க்கை முகத்திலேயே விட்டுவிடுங்கள். பின்னர் இந்த மாஸ்க்கை கீழ் இருந்து மேலாக உரித்து எடுக்க வேண்டும். மாஸ்க்கை உரித்து எடுத்தவுடன், தண்ணீரை கொண்டு கழுவ கூடாது. ஒரு சுத்தமான துணியால் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சருமத்துளைகள் அடைவதற்காக டோனரை உபயோகிக்க வேண்டும்.

இந்த மாஸ்க்கை போட்டவுடன் குறைந்தது 8 மணிநேரத்திற்காவது சோப்பை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம். முகத்தையும் கழுவ வேண்டாம். இதனால் முகத்திற்கு படிப்படியாக வியக்கத்தக்க மாறுதல்கள் கிடைக்கும்.