எலும்பும் தோலுமாக மாறிய ரோபோ சங்கர் என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர், ஸ்டான்ட் அப் கமெடியனாக பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் தனது தனித்திறமையாலும் கடினமான உழைப்பாலும் இன்று வரை பெரிய திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

நகைச்சுவை நாயகன், குணச்சித்திர நடிகர் என பல கதாபாத்திரங்களிலும், முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

2019 ம் ஆண்டில் வெளியான தி லயன் கிங் திரைப்படத்திற்கும் பூம்பா என்ற கதாபாத்திரத்திற்கு இவர் குரல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர், காரணம் உடல் மெலிந்து மிக ஒல்லியாக காணப்பட்டார்.

இதற்கு என்ன காரணம்? எதனால் இந்த எடையிழப்பு? என பலரும் பலவிதமாக கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்துள்ள ரோபோ சங்கரின் அண்ணன் மகளான இந்து, சித்தப்பா படங்களில் பிஸியாக இருந்தார்.

படத்திற்காக உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஒரு வருடமாகவே உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்தினார்.

அத்துடன் இரண்டு, மூன்று நிகழ்ச்சிகள் இருந்ததால் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய சூழல் இருந்தது.

இதனால் அவர் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம், இதுதான் எடையிழப்புக்கு காரணம், வேறு எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளார்.