புழுதி புயலில் சிக்கிக் கொண்ட சீன மக்கள்

சீன தலைநகர் பீஜிங்கில் இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக புழுதிப்புயல் கடுமையாக தாக்கியுள்ளது.

நோய்ப்பாதிப்பு கொண்டவர்கள் அல்லது முதியவர்கள் என வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என நகர நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மட்டுமின்றி, பொதுமக்கள் வீட்டுக்கு வெளியே முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மணல் மற்றும் புழுதியால் நகரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நகர நிர்வாகம் மக்களை எச்சரித்துள்ளது. 2017க்கு பின்னர் தற்போது மிக மோசமான புழுதிப்புயல் தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், புதன்கிழமை இதன் தாக்கம் மிக மோசமாக இருந்தது எனவும், காற்றின் தரம் குறிப்பிடத்தக்க வகையில் மோசமானதாக மாறியது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.