அசத்தப்போவது யார் நிகழ்ச்சி பிரபலம் திடீர் மரணம்

அசத்தப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடியில் கலக்கியவர் கோவை குணா. அவர் தற்போது இறந்துவிட்டதாக வெளியாகி இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை குணா உடல்நலக்குறைவால் கோவையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டிவி மட்டுமின்றி கோவை குணா திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் சென்னை காதல் என்ற படத்தில் நடித்து இருந்த நிலையில், அடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

டிவி, மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மட்டுமே அவர் perform செய்து வந்தார். அவர் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் அடிக்கடி சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.