பிரிட்டனில் தலைமறைவாக இருக்கும் இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

புகலிடக்கோரிக்கைக்கான விசாரணைக்காக பிரிட்டனின் உள்துறை அமைச்சிற்கு செல்வதற்கு நான் விரும்பவில்லை நான் ஆபத்தை சந்திக்க விரும்பவில்லை என 28 வயது டிராவிட் கூறியுள்ளார்.

அவர் கடந்த வருடம் இந்தியாவிலிருந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி பிரிட்டனிற்கு வந்திருந்தார். அவர்கள் என்னை தடுத்துவைத்து ருவண்டாவிற்கு அனுப்பகூடும் என தெரிவிக்கும் அவர் தற்போது எனக்கு வேறு வழியில்லை எனவும் குறிப்பிட்டார்.

சிறிய படகுகள் மூலம் குடியேற்றவாசிகள் அகதிகள் பிரிட்டனிற்குள் நுழைவதை தடுப்பதற்கான மூலோபாயங்களை பிரிட்டிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளதை தொடர்ந்து தாங்கள் ரூவான்டாவிற்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அகதிகள் பலர் தலைமறைவாகியுள்ளனர் என்ற தகவல் ஸ்கைநியுசிற்கு கிடைத்துள்ளது.

அவர்கள் சமூகத்தில் உத்தியோகபூர்வ இடம் இல்லாததால் அமைப்பு முறைக்கு வெளியே சட்டவிரோதமாக வாழ முயல்கின்றனர். தென் லண்டனில் நாங்கள் அந்த மூவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டோம்,அவர்கள் அனைவரும் புகலிடம் கோருவதற்காக லண்டன் வந்தவர்கள் தற்போது அந்த கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இலங்கையில் ஒடுக்குமுறை துன்புறுத்தலை அனுபவித்ததாகவும் பின்னர் அங்கிருந்து உயிர் தப்பி ஆங்கிலகால்வாய் ஊடாக சிறிய படகுகில் பிரிட்டனிற்குள் நுழைய முயன்றதாகவும் இலங்கையை சேர்ந்த அபிந்தன் தெரிவித்தார். அவர் பொலிஸ் அல்லது அதிகாரிகளை பார்ப்பதை தான் எவ்வாறு தவிர்த்துக்கொள்கின்றேன் என்பதை எங்களிற்கு செய்துகாட்டினார்.

நான் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றேன், பொலிஸ் கார் தென்பட்டால் நான் அந்த பக்கம் செல்வதில்லை என அவர் குறிப்பிட்டார். இலங்கையில் வர்த்தக கல்வியை பயின்ற அயுட்சன் தானும் ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக இலங்கையிலிருந்து தப்பிவெளியேறியதாக தெரிவித்தார்.

தானும் தற்போது மறைந்து வாழ்வதாக அவர் தெரிவிக்கின்றார், உங்களால் வெளியே செல்ல முடியாது நாங்கள் அச்சமடைந்துள்ளோம் எங்களை யாராவது பிடித்தால் ருவான்டாவிற்கு அனுப்பிவிடுவார்கள் என அஞ்சுகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த மூவரும் பிரிட்டனில் பதிவு செய்யப்படாமல் வாழும் குடியேற்றவாசிகளின் பட்டியலில் இணைந்துகொள்கின்றனர்- பணத்திற்காக சுத்தம் செய்தல் தோட்ட வேலை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர், எங்கு வானத்திற்கு மேல் கூரை தென்படுகின்றதோ அங்கு தங்குகின்றனர்.

அவர்கள் தங்களிற்கு கிடைக்கும் பணத்தை பொக்கட் மணி என தெரிவிக்கின்றனர்,ஆனால் உண்மையில் அது வரிவிதிக்க்ப்படாத கணக்கில் எடுக்கப்படாத வருமானம். புகலிடக்கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரையில் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு பிரிட்டனில் உள்துறை அமைச்சு வழங்கிவரும் தங்குமிடத்தை அல்லது புகலிடத்தை புறக்கணிப்பதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன் காரணமாக அவர்கள் சுகாதார சேவைகள் சிலவற்றை இழக்கலாம். பதிவு செய்யப்படாத குடியேற்றவாசியின் வாழ்க்கையை வாழ்பவர் கனகசபாபதி- பிரிட்டனில் சட்டவிரோதமாக வாழும் மில்லியன் கணக்கானவர்களில் அவரும் ஒருவர் , எத்தனை பேர் இப்படி வாழ்கின்றனர் என்பது எவருக்கும் தெரியாது.

இந்நிலையில் 46 வயதான கனகசபாபதி 20 வருடங்களிற்கு முன்னர் ஒடுக்குமுறைகளில் இருந்து தப்புவதற்காக இலங்கையிலிருந்து தப்பிஓடிவந்தவர். மூன்று வருடங்களிற்கு முன்னர் அவரது அடைக்கல கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது,கடந்த ஐந்து வருடகாலமாக அவர் யாரோ ஒருவரின் கராஜில் வசித்துவருகின்றார்.