தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம் தங்கத்தின் விலையில் மீண்டும் கடும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை தங்கப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்திருந்த நிலையில், தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

எனினும், இந்த வார ஆரம்பத்தில் இருந்து தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க நிலவரம்

அதன்படி இன்றைய தினம் இலங்கையில் பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் வருமாறு,

தங்க அவுன்ஸ் – ரூ. 624,242

24 கரட் 1 கிராம் – ரூ. 22,020

24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 176,200

22 காரட் 1 கிராம் – ரூ. 20,190

22 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 161,500

21 காரட் 1 கிராம் – ரூ. 19,270

21 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 154,150