ஏ.ஆர் ரஹ்மானுக்கு இணையான சம்பளம் வாங்கும் அனிருத்.

அனிருத்
தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் இசையமைக்காத திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

ரஜினியின் ஜெயிலர், தலைவர் 170, கமலின் இந்தியன் 2, விஜய்யின் லியோ, அஜித்தின் ஏகே 62 என பல தமிழ் திரைப்படங்களுக்கு இவர் தான் இசையமைத்து வருகிறார்.

இதுமட்டுமின்றி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இப்படி தன்னுடைய கேரியரில் உச்சத்தில் இருக்கிறார்.

சம்பளம் விவரம்
இந்நிலையில், அனிருத் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 5 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது ஏ.ஆர். ரஹ்மானுக்கு இணையான சம்பளம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.