வாரிசு
விஜய் என்னதான் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும், அவரது அப்பா எஸ்ஏசி மற்றும் அம்மா ஷோபா ஆகியோரை சண்டை காரணமாக பிரிந்து தான் இருந்து வருகிறார். அதை பலரும் விஜய்க்கு எதிராக விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.
சொந்த அப்பா உடன் சண்டை என்பதை நிஜத்திலேயே படமாக எடுத்து வைத்திருக்கிறார் என வாரிசு படத்தை ஒரு சிலர் ட்ரோல் செய்தனர்.
அம்மா விளக்கம்
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் அப்பா- அம்மா இருவரையும் கண்டுகொள்ளவே இல்லை எனவும் ட்ரோல்கள் வந்தது. இது பற்றி விஜய்யின் அம்மா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஜய் ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. அவர்களை விஜய் திருப்திபடுத்தவேண்டும் என்று தான் நாங்களும் விரும்புகிறோம். எங்களை கண்டுகொள்ளவில்லை என்கிற எண்ணம் எல்லாம் இல்லை என கூறி உள்ளார்.