அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான விவோ V27 சீரிஸ்

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது V27, V27 ப்ரோ என இரண்டு புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய V27 மற்றும் V27 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 6.78 இன்ச் FHD+ 120Hz வளைந்த AMOLED ஸ்கிரீன், 50MP ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக விவோ V27 இருக்கிறது. இதன் ப்ரோ வெர்ஷன் டிமென்சிட்டி 8200 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் மேஜிக் புளூ நித்தில் போட்டோக்ரோமிக் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது நிறத்தை டார்க் புளுவாக மாற்றுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 19 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும்.

விவோ V27 மற்றும் V27 ப்ரோ அம்சங்கள்: 6.78 இன்ச் 2400×1080 பிக்சல் FHD AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் விவோ V27 – மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், மாலி G610 MC4 GPU விவோ V27 ப்ரோ – மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், மாலி G610 MC6 GPU 8 ஜிபி ரேம், 128 ஜிபி, 256 ஜிபி மெமரி 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13 டூயல் சிம் ஸ்லாட் 50MP பிரைமரி கேமரா 8MP அல்ட்ரா வைடு கேமரா 2MP மேக்ரோ கேமரா 50MP ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்,

ஹை-ரெஸ் ஆடியோ 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் யுஎஸ்பி டைப் சி 4600 எம்ஏஹெச் பேட்டரி 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: விவோ V27 மற்றும் V27 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நோபில் பிளாக் மற்றும் மேஜிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் விவோ V27 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம்,

256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 36 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மார்ச் 23 ஆம் தேதி துவங்குகிறது. விவோ V27 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 எ்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை மார்ச் 6 ஆம் தேதி துவங்குகிறது. அறிமுக சலுகை விவரங்கள்: ஹெச்டிஎப்சி,

ஐசிஐசிஐ, கோடக் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ஆன்லைனில் ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி, ஆஃப்லைனில் ரூ. 3 ஆயிரத்து 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போன்களை விவோ இ ஸ்டோரில் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 2 ஆயிரத்து 500 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆஃப்லைனில் V ஷீல்டு டிவைஸ் ப்ரோடெக்ஷன் வாங்கும் போது அதிகபட்சம் 40 சதவீதம் வரை தள்ளுபடி. விவோ V27 ப்ரோ மாடலை ஆஃப்லைனில் வாங்குவோர் விவோ ட்ரூ வயர்லெஸ் ஏர் மாடலை வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடி கிடைக்கும்.