உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்கா இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு இலங்கை அரசாங்கத்திடம் இதனை தெரிவித்துள்ளது.
டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இதனை கூறியுள்ளது.
இலங்கை மக்களின் குரல்கள் ஒலிக்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும், இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயல் என்றும் அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது.