திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதற்க்கு இதுதான் காரணமாம்

மணிமேகலை
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் நுழைந்து தமிழக மக்களால் கொண்டாடப்படும் பிரபலமாக மாறியவர்.

அந்த தொலைக்காட்சியில் ஒரு போட்டியாளராக, தொகுப்பாளராக, காமெடி நாயகியாக என பல திறமைகளை காட்டி வந்தார்.

அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கெட்டப்பில் அசத்திவிடுவார்.

ஆனால் திடீரென நேற்று தான் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரப்போவது இல்லை என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

 

காரணம் என்ன

நான் இனி வர மாட்டேன், எனக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி என்று மட்டும் கூறியிருந்தார், ஆனால் காரணம் என்ன என்பது கூறவில்லை.

அவரது பதிவில் அனைவருக்கும் நன்றி என கூறியவர் அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை, எனவே அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார் என்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)