கவின் படத்தை புகழ்ந்த ராகவா லாரன்ஸ்..

சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான’லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ‘டாடா’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “டாடா படம் பார்த்தேன். உணர்வு ரீதியாக அப்படம் என்னைத் தொட்டது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் விதமான குடும்ப திரைப்படம். இயக்குனர் கணேஷ் கே பாபு மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.