நடிகை ,மனோரம்மாவின் மகனை பார்த்துள்ளீர்களா?

நடிகை மனோரமா
தமிழ் திரையுலகம் யாராலும் ஈடுசெய்ய முடியாத ஒரு இடம் என்றால் அது மனோரமா ஆச்சியுடையது தான்.

காமெடி அப்படி ஒரு கலக்கு கலக்கியுள்ளார். பெண் நடிகைகளில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர்.

ராமநாதன் என்பவரை மனோரமா 1964ம் ஆண்டு திருமணம் செய்ய பின் சில காரணங்களால் 1966ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் இருக்கிறார்.

பூபதியின் நிலை
குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமான பூபதி அதன்பின்னர் சில படங்களில் நடித்தார், ஆனால் பெரிய வெற்றி காணவில்லை. இதனால் அவரை மதுப்பழக்கம் பிடிக்க, அதனால் நிறைய சோதனைகளை சந்தித்துள்ளார்.

கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் மது கிடைக்காமல் தூக்க மாத்திரை சாப்பிட உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எல்லாம் பெற்றார்.