வினய் உடன் காதலை உறுதி செய்த விமலா ராமன்

வினய்
உன்னாலே உன்னாலே, என்றுன்றும் புன்னகை போன்ற பல படங்களில் நடித்தவர் வினய். தற்போது அவர் வில்லனாகவும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

வினய் பிரபல மலையாள நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார் என ஒரு வருடத்திற்க்கு முன்பிருந்தே செய்தி வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் அதிகம் வைரல் ஆகின.

ஒரே குடும்பம்?
தற்போது விமலா ராமன் அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் வினய்யும் இருக்கிறார்.

குடும்பம் என விமலா ராமன் குறிப்பிட்டு இருப்பதால் அவர்கள் காதலை மறைமுகமாக உறுதி செய்திருப்பதாகவே தெரிகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.