முடிவை நெருங்கும் பாரதி கண்ணம்மா சீரியல்!

பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாரதி கண்ணம்மா.

மலையாள தொடரான கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக்காக பிரவீன் பென்னட் இயக்கிய இந்த தொடர் ஆரம்பத்தில் ஹிட்டாக ஓடியது.

ஆனால் இடையில் கதைக்களத்தில் விறுவிறுப்பு இல்லாமல் செல்ல ரசிகர்கள் தொடரை நிறைய கலாய்த்து வந்தார்கள்.

அட சீரியலை முடிங்கப்பா என ரசிகர்கள் கதறி நிறைய மீம்ஸ், வீடியோக்களை வெளியிட்டார்கள்.

அதிகாரப்பூர்வ வீடியோ
தற்போது தமிழ்நாட்டின் முன்னணி மெகா தொடர் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வ வீடியோ வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட சூப்பர் நல்ல முடிவு என தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.