அஜித்தின் AK62 படத்தில் நடிக்க இருக்கும் இரண்டு ஹீரோயின்கள்

அஜித் தற்போது துணிவு படத்தின் ரிலீஸுக்கு பிறகு தனது அடுத்த படமான AK62 படத்தை தொடங்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் அந்த படம் பற்றிய அறிவிப்பு வந்து நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் ஷூட்டிங் தொடங்குகிறது.

தற்போது முதற்கட்ட பணிகளை இயக்குனர் செய்து வருகிறார். ஷூட்டிங்கும் முழு வீச்சில் விரைவில் தொடங்க இருக்கிறது.

ஹீரோயின் யார்
ஏற்கனவே பல முன்னணி ஹீரோயின்கள் பெயர் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நடிகை திஷா பாட்னி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இருப்பினும் இது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.