காட்டு யானை மோதியதில் தடம் புரண்ட புகையிரதம்

காட்டு யானைகள் மீது மோதியதால் நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத ஒன்று தடம் புரண்டுள்ளது.

ஹபரணை ஹதரச்கொட்டுவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து காரணமாக, கிழக்கு மாகாணத்திற்காக புகையிரத சேவைகள் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.