சிறு வயதில் வைரலாகும் அதர்வா புகைப்படம்

பிரபல நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் திரைதுறையில் தடம் பதித்தவர் நடிகர் அதர்வா. இவர் 2010 -ம் ஆண்டு வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதர்வா தொடக்கத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய பரதேசி திரைப்படதில் ஹீரோவாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சிறுவயது புகைப்படம்
சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருக்கும் அதர்வா, சிறுவயதில் அம்மாவுடன் சேர்ந்த எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபகாலமாக பல பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், தற்போது அதர்வாவின் புகைப்படமும் ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by StarBoy ⭐️ (@atharvaamurali)