எச். வினோத்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எச். வினோத். இவர் இயக்கத்தில் அடுத்ததாக துணிவு படம் வெளிவரவுள்ளது.
துணிவுக்கு பின் கமல் ஹாசனை வைத்து எச். வினோத் இயக்கப்போவதாக தெரியவந்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
துணிவு படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து பல இடங்களில் Interview கொடுத்து வருகிறார் எச். வினோத். அப்படி அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.
விஜய் ஒரு..
இவர் பேசியதில், ‘ நம் அனைவருக்கும் தெரியும் விஜய் சார் எவ்வளவு அமைதியான நபர் என்று. ஆனால், அவர் கேமரா ஃபிரேம் குள்ள வரும்பொழுது வேற மாறி, விஜய் ஒரு பெரிய ராட்சசன் போல் நடிப்பார் ‘ என்று கூறியுள்ளார்.
தளபதி விஜய் குறித்து இயக்குனர் எச். வினோத் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்க்கு எச். வினோத் கதை கூறியுள்ளார் என்றும் விரைவில் இருவரும் இணைய அதிக வாய்ப்புகள் என்று ஏற்கனவே தகாவால் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.







