முதன் முறையாக தனது தாய் தந்தையரின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஹாரிஸ் ஜெயராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தமிழில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதன்பின் இவர் இசையில் வெளிந்த காக்கா காக்கா, வாரணம் ஆயிரம், 7ஆம் அறிவு, நண்பன், துப்பாக்கி என பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. மேலும் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் JR 30 படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் அப்பா, அம்மா
இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

தனது 2வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்றும் தான் இன்று இப்படியொரு நல்ல நிலையில் இருக்க தன்னுடைய பெற்றோர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..