அடுத்த வாரம் அளவில் இந்தியா செல்லும் ஜனாதிபதி!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

அயல் நாடுகளின் தலைவர்களை தவிர மேலும் பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு

இந்தியா நடத்தும் “Voice of the Global South Summit”என்ற மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இவர்கள் அந்நாட்டுக்கு செல்ல உள்ளனர். எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்த மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ளது.

மாநாட்டில் அயல் நாடுகளின் தலைவர்களை தவிர ஆபிரிக்க நாடுகளான அங்கோலா, கானா, நைஜீரியா, மொசம்பிக், செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்களும், ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களும்,உஸ்பெகிஸ்தான், மொங்கோலியா ஆகிய நாடுகளின் தலைவர்களும், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்துக்கொள்ள உள்ளனர்.

அத்துடன் 120 நாடுகளுக்கு மாநாட்டில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.