சரத்குமார் – ராதிகாவின் மகனை பார்த்துள்ளீர்களா?

சரத்குமார் – ராதிகா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் கடந்த 2005ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் இருவரும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். சரத்குமாருக்கும் நடிகை ராதிகாவிற்கும் பிறந்தவர் தான் ராகுல் சரத்குமார். இவர் சமீபத்தில் தான் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.

சரத்குமார் – ராதிகாவின் மகன்
இந்நிலையில், தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தையும், வீடியோவையும் நடிகை ராதிகா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் ராகுல் சரத்குமாரை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம சரத்குமார் – ராதிகாவின் மகனா இது, எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம், வீடியோ..