பிரேசிலை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே தனது 82 ஆவது வயதில் நேற்றைய தினம் காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உடல் உறுப்புக்கள் செயலிழந்ததன் காரணமாக அவர் நேற்று காலமாகியுள்ளார் என அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை
இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டிருந்ததுடன் கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது.
கடந்த நவம்பர் மாதம் அவரது நிலை மோசமடைந்தததன் காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பீலே சிகிச்சை பலனினின்று உயிரிழந்ததாக அவரது மகள் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மூன்று முறை உலக கோப்பையை வென்றவர் என்ற பெருமைக்குரிய பீலே, தனது 21 வருட கால்பந்தாட்ட வாழ்க்கையில் 1281 கோல்களை அடித்ததன் மூலம் உலக சாதனை படைத்திருந்தார்.
இவ்வாறாக உயிரிழந்த உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலேவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.